×

பிளஸ்1 பொதுத்தேர்வில் வெங்கடேஷ்வரா பள்ளி 100% தேர்ச்சி

கோபி, மே 9: பிளஸ்1 பொதுத்தேர்வில் கோபி  வெங்கடேஷ்வரா வித்யாலயா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி மாணவர்கள் 290 பேர்  11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி  எஸ்.தாரணி 600க்கு 554 மதிப்பெண்களும், வி.நித்யஸ்ரீ 552  மதிப்பெண்களும், எஸ்.திரிஷலா 539 மதிப்பெண்களும் பெற்று முதல் 3  இடங்களை பிடித்தனர். 500 மதிப்பெண்களுக்கு மேல் 26 பேரும், 450க்கு  மேல் 69 பேரும், 400க்கு மேல் 131 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 
தமிழ்  பாடத்தில் அதிக மதிப்பெண்களாக 99, உயிரியியல், கணினி அறிவியல், பொருளியல்,  வணிகவியல், கணக்குபதிவியல் பாடங்களில் 98 மதிப்பெண்களையும், கணினி  பயன்பாடுகள் பாடத்தில் 97 மதிப்பெண்களையும், ஆங்கில பாடத்தில் 96  மதிப்பெண்கள் வேதியியல் பாடத்தில் 95 மதிப்பெண்கள், கணித பாடத்தில் 92  மதிப்பெண்களையும்,  இயற்பியல் பாடத்தில் 91 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை அமைச்சர் கருப்பணன்,  எஸ்.வி.வி.கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி.பி.கெட்டிமுத்து, பள்ளி  இயக்குனர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் பாராட்டினர்

Tags : Venkateshwara ,Commonwealth ,
× RELATED ராயனூர் தாந்தோணிமலை சாலையில் சாக்கடை...